Monday, 29 December 2014

TAMILNADU ASTROLOGER BALACHANDRAN

மனித நிலை,மனநிலை பாதிப்பில் சந்திரன்

சிலருக்கு காரணம் இல்லாமல் ஏதாவது ஒரு கவலை அல்லது குழப்பம் அல்லது கற்பனை யான அச்சம் தாழ்வு மனப்பான்மை ,உயர்வு மனப்பான்மை ஆகியவை ஏற்படும் இத்தகைய குறைகள் அனைத்திற்கும் காரணம் சந்திரனுக்கு ஜெனன காலத்தில்ஏற்பட்டுள்ள தோசம் பாவகிரக சேர்க்கைகள் அல்லது அளவிற்கு மீறிய பலம் ஆகியவையே ஆகும் ,மனம் சம்பந்தமான பலம் அல்லது பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவுவது சந்திரனில் நிலையே ,இவ்விதம் அறிந்து கொள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியமாகும் ,வாழ்க்கையின் வெற்றி தோல்விகளில் சந்திரன் பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது
website:www.tamilnaduastrologer.com

TMILNADU ASTROLOGER BALACHANDRAN

நமது இந்து மதம் மிக ஆழமான தத்துவங்கள் ,மிக உயர்ந்த வாழ்க்கை நெறி முறைகள் நிறைந்தது ,இவைகளை பற்றி அறிந்து கொள்ள வேதங்கள் தோன்றின ,வேதங்களில் சொல்ல பட்ட தத்துவ தாத்பரியங்களை அறிய ஆறு அங்கங்கள் நெறி முறைப் படுத்த்ப்பட்டுள்ளது,அந்த ஆறு அங்கங்கள் முறையே மருத்துவம் ,கல்வியறிவு ,சங்கீதம் ,நாட்டியம்,ஜோதிட கலை ,அழியா நிலை இவற்றில் ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண்களாய் போற்றப்படுகிறது .

Tamilnadu Astrologer Balachandran

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )
***********************************

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.www.tamilnaduastrologer.com

Tuesday, 25 March 2014

நல்ல நேரம்

நல்ல நேரம் 

திருமணம் ,கிரகபிரவேசம் போன்ற விசேசங்கலுக்கு நல்ல நேரம் குறிகக சிலர் 
தினசரி காலாண்டரை பார்த்து தாங்கலாகவே குறித்து கொள்கிரார்கள் ,ஆனால் 
தினசரி காலாண்டரில் நிரைய தவறு உள்ளது பஞ்சாங்களில் குறிப்பிடும் நேரமே சரியானதாகும்,அமாவாசை,பௌர்ணமிபோன்ற நேரங்கலும் தவறு உள்ளது ,
தங்கள் குடும்ப ஜோதிடரை அனுகி குறித்து கொள்வது நல்லது

Monday, 24 March 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

  ஏழரைச் சனி என்ன செய்யும்?

பிறந்த உடனேயே 20வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.

2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் பெருமையை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.


 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள்.அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார்.

Sunday, 23 March 2014

ராசிகற்கள் அதிஷ்ட மோதிரம் 9500574641

ராசிக்கற்கள்


மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். 
இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். 
கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் – வைரம்

ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் 
இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் 
வசீகரத்தையும் கொடுக்கும்.

மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது.

கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது 

அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க 
வல்லது.

சிம்மம் – மாணிக்கம
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். 

இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.

கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். 

இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் 
அளிக்க வல்லது

துலாம் – வைரம்
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய 

வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், 
யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை 

அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், 
அதிர்ஷ்டம் உண்டாகும்.

தனுசு – கனக புஷ்பராகம்.
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன 
அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது

கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ 

விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் 
கொடுக்க வல்லது
மீனம் – கனக புஷ்பராக்ம்
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். 

இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது 
மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்

TAMILNADU ASTROLOGER

ஜோதிடம்,திருமணப்பொருத்தம்,எண்கணிதம்,குழந்தைகலுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில்
பற்றிய பிரச்சனைகள் ,தோசங்கள் ,ராசிகல்,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்கலுக்கும் அனுகவும்.ஜோதிடர் பாலச்சந்திரன் .Erode Astrologer,
நேரில் வரமுடியதவர்கள் தட்சனையை எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன்
போன் மூலம் ஜோதிட பலன்கள்  தெரிவிக்கப்படும்.
welcome to Vishnu Jothida Nilayam ,  To know about your future , Send your Name, correct D.O.B, Place of birth and time of Birth and remit RS: …./- Towards consulting fees to the  following  P.Balachandran AXIS Bank , Branch :Erode, A/C No 118010100046321,IFS Code UTIB0000118 Thanking you Website:www.tamilnaduastrologer.com

Saturday, 15 March 2014

தீபம் ஏற்றும் முறைகளும், பயன்களும்

தீபம் ஏற்றும் முகபாவம்
1,ஒரு முகம் ஏற்றுவது மத்திம்ம்
2,இரணடு முகம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமை பெருகும்
3,மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகம் தரும்
4,நான்கு முகம் ஏற்றுவது கால்நடை இனத்தை தரும்
5,ஐந்து முகம் ஏற்றுவது செல்வம் பெருகும்


தீபம் ஏற்றும் முறைகளும், பயன்களும்



தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

விளக்கேற்றும் திசை



கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி 
மேற்கு - கடன், தோஷம் நீங்கும் 
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

எண்ணெயின் பலன்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். 
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் 
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும் 
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும் 
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி 
விளக்கெண்ணெய்- புகழ் தரும் 
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள் 

விநாயகர் - தேங்காய் எண்ணெய் 
மகாலட்சுமி - பசுநெய் 
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் 
பைரவர் - நல்லெண்ணெய் 
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 
                     5
கூட்டு எண்ணெய் 
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் நல்லெண்ணெய்

விளக்கின் தன்மை

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு பீடை விலகும் 
வெள்ளி விளக்கு திருமகள் அருள் கிடைக்கும் 
பஞ்ச லோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும் 
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும் 
இரும்பு விளக்கு சனி கிரக தோஷம் விலகும்.

திருவிளக்கின் சிறப்பு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். . விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.





Wednesday, 12 March 2014

ராகு கேது தோஷப் பரிகாரங்கள்

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம். இங்கே ராகு பகவான் தனது மனைவியோடு காட்சி அளிக்கிறார். இங்கு சென்று ராகு பகவானை வழிபாடு செய்தால் ராகு பகவானால் உண்டாகும் அசுப பலன்கள் குறைந்து அனுகூல பலன்கள் அதிகரிக்கும். இங்கு ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறும் அற்புதத்தைக் காணலாம்.

   ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது.
   ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
   கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

Friday, 14 February 2014

முகூர்த்த வயது

முகூர்த்த வயது
ஆணுக்கு ஒற்றைப்படை வயதிலும் 
பெண்ணுக்கு இரட்டைப் வயதிலும் 
விவாகம் செய்தல் வேண்டும்

Tuesday, 11 February 2014

நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது.

நவரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும். விதிமுறைகளை உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால், தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

Friday, 7 February 2014

நவரத்தின மோதிரத்தை யார் அணிய வேண்டும்


நவரத்தின மோதிரத்தை யார் அணிய வேண்டும்

மேச ராசி,விருச்சிக ராசியில் பிறந்தவர்கள்,
மேச லக்கனம்,விருச்சிக லக்கனத்தில் பிறந்தவர்கள்,
மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்,செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்
நவரத்தின மோதிரத்தை அணிய வேண்டும்

Monday, 13 January 2014

பிறந்த நட்சதிரதன்று

பிறந்த நட்சதிரதன்று
வருடத்திற்கு ஒரு முறையாவது நமது பிறந்த நட்சதிரதன்று நம் நட்சதிரதுக்குரிய 
ஸ்தலத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் 
நடக்க ஆரம்பிக்கும் 

Sunday, 12 January 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்

 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போதுதான்
 அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு
 முன் செல்வது நலம்.......!

ஏழரைச் சனி ,விரைய சனி, அஷ்டம சனி

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் 
கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. 

ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார்.  கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும். 


எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். 

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. 


ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். 

இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம். 

Saturday, 11 January 2014

பைரவர் வழிபாடு

துன்பங்களில் இருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறப்பானது. எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள், பெரிய அளவில் பரிகாரமோ, பூஜையோ, ஹோமமோ செய்ய முடியாதவர்கள் அல்லது அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பைரவ வழிபாட்டினை மேற்கொள்ளலாம். விநாயக பெருமானை வணங்கி விளக்கு ஏற்றி (எந்த விளக்கும் ஏற்றலாம்), பிறகு பைரவ வழிபாட்டை தொடங்க வேண்டும்.  
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, உங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் விளக்கு போட வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம். இல்லையெனில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். வாரத்தின்ஒருநாள்சனிக்கிழமையாகஇருப்பின்சிறப்பானது. .
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்புநிற அரளியால்வழிப்பட்டால் நல்லமக்கள் செல்வங்களைப் பெறலாம் . அஷ்டமி திதியில்மற்றும் பிரதி தமிழ்மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் , சுவாதிமிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிப்பட்டால்உத்தியோகத்தில் மதிப்பும் , பதவி உயர்வும் கிட்டும் தொழிலில் லாபம்கிட்டும் .
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிப்பட்டால்வழக்குகளில் 
வெற்றிகிட்டும் .

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிப்பட்டால் காலத்தினால்தீர்க்க முடியாத 
தொல்லைகள் நீங்கும் . நல்லருள்கிட்டும் . பஞ்ச தீபம்என்பது இலுப்பைஎண்ணெய் , 
விளக்கெண்ணெய் , தேங்காய்எண்ணெய் ,நல்லெண்ணெய் , பசுநெய் ஆகும் . இவற்றை
 தனித்தனி தீபமாக ஏற்றவேண்டும் . அகல் விளக்கில் ஏற்றலாம் . ஸ்ரீ பைரவருக்கு இந்த 
பஞ்ச தீபம்ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் .

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொருசெவ்வாய்தோறும் பைரவரைவணங்கி "கால பைரவ அஷ்டகம்படித்துவந்தால் எதிரிகளை அழித்து , கடன்கள்தீர்த்து , யமபயம் , மட்டுமில்லாதுஎவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம் . 

Thursday, 9 January 2014

ஜோதிடம் பொய்ப்பதில்லை.

 ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.
எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும். ஜோதிடம் பொய்ப்பதில்லை.

Tuesday, 7 January 2014

Numerology

ஜாதக பஞ்சாகப்படி ஒருவரின் நட்சத்திரத்தை குறிக்கும் எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக வைத்தனார். பிறகு அரிச்சனை செய்வதன் மூலம் தான் அவர்களுக்கு அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் வந்து சேரும் என்று கருதப்பட்டது.
நீளமாக பெயர் அமைந்தவர்களை அழைக்கும் போது அப்பெயரினை சுருக்கி அழைக்க பட்டால். அந்த நீளமான பெயரின் பலன் நிச்சயம் மாறுபடும். அதேசமயத்தில் சுருக்கி அழைக்கப் படும் பெயரின் பலன் அவர்களை ஆளும்.  அழைக்கும் போது அந்த பெயர் எண்ணுக்கான தன்மையும் வாழ்க்கை பாதை மாற்றமும் ஏற்படும். சிறு வயதில் (1 – 20) ஒருவருக்கு முதல் எழுத்தின் ஆளுமையே அதிகம் இருக்கும். பிறகு 21 வயதிற்கு மேல் அவர், அவரின் பெயரை எழுத்து வடிபத்தி அதிகம் உபயோகித்தார் என்றால் அந்த பெயரின் எழுத்துக்களின் கூட்டு எண்ணும் அவர்களை ஆளும்.


செவ்வாய் தோசம் என்றால் என்ன?



திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவோண்டிய விசயம் செவ்வாய் தோசமாகும்.ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் 


1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன் 
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி 
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன் 
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி

ஆயில்யம் நட்சத்திரம்

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அந்தப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
இதெல்லாம் பொதுவாக சொல்லப்படுவது. மகம் என்றால் ஜகத்தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத்திரத்தில் பிறந்து மாடு மேய்ப்பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கிறோம். நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது.

மாமியார் ஸ்தானம் அந்தப் பெண்ணிற்கு நன்றாக இருக்கிறது. மாமியார் ஸ்தானம் நன்றாக இருந்தால் ஆயில்யமாவது, விசாகமாவது தைரியமாக பெண் எடுக்கலாம். நீங்க நல்லா இருக்கணும்னு சொல்லிதானே இதை எடுத்துத் தருகிறேன் என்று சொன்னேன்.

பொதுவாக ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலகலப்பாக பேசுவார்கள். முகத்தை உம்மென்று வைத்திருக்க மாட்டார்கள். கஷ்டமான சூழ்நிலையிலும் லட்சுமி கடாட்சமாக இருப்பார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எழுத்தாற்றல், பேச்சாற்றல் எல்லாம் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும்.