Monday 24 March 2014

ஏழரைச் சனி என்ன செய்யும்?

  ஏழரைச் சனி என்ன செய்யும்?

பிறந்த உடனேயே 20வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.

2வது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். இது 2வது சுற்று. அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள். மங்கு, பொங்கு, மரணம் என்று சொல்வார்கள். ஆனால், அது அப்படி கிடையாது.

அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும். மற்றபடி, விரயச் சனி என்பது ஏழரைச் சனியின் 3 பாகங்கள் ஒ‌ன்று. முதல் இரண்டரை விரயச் சனி. 2வது இரண்டரை ஜென்மச் சனி., 3வது இரண்டரை பாதச் சனி.

இதெல்லாம் இல்லாமல், கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என்றெல்லாம் நிறைய உண்டு. பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் பெருமையை குறைப்பதுதான் இவருடைய வேலையே. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.


 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள்.அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார்.

No comments:

Post a Comment