Wednesday, 18 January 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்

All Problem Solutions Astrologer
Astro: P.Balachandran  
Cell: +91 9500574641
whatsApp:+91 9842961717 
               
EMAIL:baluastroerode@gmail.com
WEBSITE:www.tamilnaduastrologer.com
Tamilnadu ,India.         
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில்  கொள்ள‍ வேண்டிய குறிப்புகள்
1. முதல் குறிப்பு
திருமணம் மல மாதத்தில் வைக்க கூடாது. மலமாதம் என்பது ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வருவது

2. இரண்டாவது குறிப்பு
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது சிறப்பு.
3. மூன்றாவது குறிப்பு
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது
4. நான்காவது குறிப்பு
புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை.
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது குறிப்பு
துவிதியை, திரிதியை, பஞ்சமி,சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பதுசிறப்பு
6. ஆறாவது குறிப்பு
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது குறிப்பு
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது குறிப்பு
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது குறிப்பு
திருமண நாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக நல்லது
10. பத்தாம் குறிப்பு
மணமக்களின் ஜனன நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் குறிப்பு
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் திருமணம் பண்ணக்கூடாது.



No comments:

Post a Comment