Tuesday, 17 January 2017

சனியால் வருகின்ற , யோகம்,சனியால் வருகின்ற ஏற்றம், யோகம்,+91 9500574641

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் 
கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. 

ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார்.  கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும். 

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்கியம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். 

எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும். 

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. 

கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. 

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். 

இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம். 

No comments:

Post a Comment