துன்பங்களில் இருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறப்பானது. எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள், பெரிய அளவில் பரிகாரமோ, பூஜையோ, ஹோமமோ செய்ய முடியாதவர்கள் அல்லது அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பைரவ வழிபாட்டினை மேற்கொள்ளலாம். விநாயக பெருமானை வணங்கி விளக்கு ஏற்றி (எந்த விளக்கும் ஏற்றலாம்), பிறகு பைரவ வழிபாட்டை தொடங்க வேண்டும்.
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, உங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண் பூசணியில் விளக்கு போட வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம். இல்லையெனில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம். வாரத்தின்ஒருநாள்சனிக்கிழமையாகஇருப்பின்சிறப்பானது. .
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்புநிற அரளியால்வழிப்பட்டால் நல்லமக்கள் செல்வங்களைப் பெறலாம் . அஷ்டமி திதியில்மற்றும் பிரதி தமிழ்மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம் , சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிப்பட்டால்உத்தியோகத்தில் மதிப்பும் , பதவி உயர்வும் கிட்டும் தொழிலில் லாபம்கிட்டும் .
சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிப்பட்டால்வழக்குகளில்
வெற்றிகிட்டும் .
தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிப்பட்டால் காலத்தினால்தீர்க்க முடியாத
தொல்லைகள் நீங்கும் . நல்லருள்கிட்டும் . பஞ்ச தீபம்என்பது இலுப்பைஎண்ணெய் ,
விளக்கெண்ணெய் , தேங்காய்எண்ணெய் ,நல்லெண்ணெய் , பசுநெய் ஆகும் . இவற்றை
தனித்தனி தீபமாக ஏற்றவேண்டும் . அகல் விளக்கில் ஏற்றலாம் . ஸ்ரீ பைரவருக்கு இந்த
பஞ்ச தீபம்ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் .
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொருசெவ்வாய்தோறும் பைரவரைவணங்கி "கால பைரவ அஷ்டகம்" படித்துவந்தால் எதிரிகளை அழித்து , கடன்கள்தீர்த்து , யமபயம் , மட்டுமில்லாதுஎவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம் .