சிவன் சிவன் என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவராகவும் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாக சிவபெருமான் கருதப்படுகிறார். இவர் நடனம், யோகம் எனக் கலைகளில் சிறந்து விளங்குபவராகவும், உமையம்மையுடன் கையிலை மலையில் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது. உமையம்மை தட்சனின் புதல்வி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்துச் சிவனை மணந்து, பின் தட்சனின் யாகத்தில் விழுந்து இறந்ததாகவும், பின்பு பர்வதராஜனின் மகள் பார்வதியாக மீண்டும் பூமியில் பிறந்து சிவனை மணந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் பார்வதி தம்பதிகளுக்கு விநாயகன், முருகன் என்ற குழந்தைகளும் உள்ளனர். அத்துடன் சிவபெருமான் தட்சனை அழிக்கத் தோற்றுவித்த வீரபத்திரனும், திருமால் மோகினியாக அவதாரம் எடுத்த போது பிறந்த ஐயப்பனும் சிவ குழந்தைகளாகக் கருதப்படுகிறார்கள். .
All Problem Solutions Astrologer Astrologer: P.Balachandran Astrology consultant WhatsApp +91 9500574641 Website:www.tamilnaduastrologer.com,
Friday, 24 February 2017
சிவபெருமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment