All Problem Solutions Online Astrologer,Numerologist,Vastu
Astro: P.Balachandran ,
Cell: +91 95005 74641 ,+91 99432 86934
whatsApp:+91 9842961717 ,
HEAD OFFICE
SRI VISHNU JOTHIDA NILAYAM
15 JEEVANANDAM STREET,
KOLLAMPALAYAM,
AMIRTHA PALPANNAI ROAD,
ERODE-638002,TAMILNADU,INDIA
அன்பு வாடிக்கையாளர்களே வணக்கம் நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பிறந்த விபரங்களை என் போன் எண்ணுக்கு அனுப்பி ஜோதிடம்,திருமணப்பொருத்தம் ,எண்கணிதம்,குழந்தைகளுக்கு அதிஷ்டபெயர் நிறுவனங்கலுக்கு அதிஷ்டபெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்சனைகள் , தோசங்கள், ராசிகல்,வாஸ்து,போன்ற ஜோதிடம் பற்றிய அனைத்து விபரங்களுக்கும் அனுகவும்.நேரில் வரமுடியதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.
ஜோதிட பலன்களை உங்கள் வீட்டில் இருந்தே போன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் கட்டணம் உண்டு,
1 தினப்பொருத்தம்
தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள்,இபொருத்தம் தாராபலன் என்று சொல்லக்கூடிய பொருத்தம். எனவே இந்த தினப்பொருத்தம் முக்கியமான ஒன்று.
2, கணம்பொருத்தம்
தேவ கணம் & மனுஷ கணம் & ராட்சஸ கணம் என மூன்று வகைப்படும். தேவம் & அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி மனுஷம்& பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ராட்சஸம்& கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சத்யம் தேவ கணத்தினருக்கு மனோபலம் உண்டு. ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் இருபலரும் உண்டு. பெண்& ஆண் நட்சத்திரங்கள் ஒரே கணமெனில் உத்தமம். இரண்டில் ஒன்று தேவகணமும் மற்றும் மனுஷ கணமெனில் உத்தமம். பெண் தேவகணம் & ஆண் ராட்சஸ கணமெனில் மத்திமம், பெண் ராட்சஸ கணம் & ஆண் தேவகணம் பொருத்தமில்லை. பெண் ராட்ச கணம் & ஆண் மனுஷ கணம் பொருத்தமில்லை.
3, மகேந்திரம் பொருத்தம்
புத்திர விருத்தி தரும் பொருத்தம் இரு பெண்ணின் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் வரை எண்ணிய தொகை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவது எனில் மகேந்திர பொருத்தம் உண்டு எனலாம். மற்றவை பொருத்தமில்லை. இப்பொருத்தம் அவசியமே.
4,ஸ்திரீதீர்க்கம் பொருத்தம்
.
பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம்..
5,யோனி பொருத்தம்
இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம்.. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.
6, இராசி பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு என்கிறது சாஸ்திரம். ஆனால் அனுபவத்தில் ஒரே ராசியெனில் உத்தமமே! ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும்! எனவே பெண் ராசி தொட்டு 2, 3, 4, 5 மற்றும் 6ம் ராசி எனில் பொருத்தமில்லை. அதே போல் எண் ராசி தொட்டு ஆண் ராசி எட்டு எனினும் பொருத்தம் அதிகம் இல்லை.
7,இராசி அதிபதி பொருத்தம்
பனிரெண்டு ராசிகலுக்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபதி, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.
8,வசியம் பொருத்தம்
இப்பொருத்தம் கணவன் & மனைவி அன்னியோன்ய உறவை குறிகாட்டும். ஒரு ராசிக்கு ஒன்று அல்லது இரண்டு ராசிகளே வசியமாக அமையும். இது அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
9, ரஜ்ஜி பொருத்தம்
ஏனைய பொருத்தம் அமைந்து இந்த ரச்சு எனும் மாங்கல்ய பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரச்சு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும். கூடி அமைந்த காதல் திருமணங்கள் தோல்வியை அடைவது ரச்சு பொருத்தம் காரணம் என்பது எமது அனுபவம் இனி இது உண்டாகும் என பார்வை செய்வோம். நட்சத்திரங்கள் ஐந்து வகை ரச்சு என பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பாதம், தொடை, உதரம், கண்டம் சிரசு எனப்படும். ஆண்& பெண் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது.
10 வேதை பொருத்தம்
வேதை எனும் சொல்லுக்கு துன்ப நிலை என பொருள்படும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரே ஒரு நட்சத்திரம் வேதையாக அமையும். இவ்வித வேதை நட்சத்திரம் ஒரே ரச்சுவாக ரச்சு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாகவே அமையும். ரச்சு பொருத்தம் குறுகிய கால மணவாழ்வு கூட சந்தோஷமாக அமைந்து முடியலாம். ஆனால் வேதை நட்சத்திரம் இணைந்தால் அந்த குறுகிய கால மண வாழ்வும் துன்பமாகவே அமையும்.
All Problem Solutions Online Astrologer,Numerologist,Vastu
Astro: P.Balachandran ,
Cell: +91 95005 74641 ,+91 99432 86934