தீபம்
ஏற்றும் முகபாவம்
1,ஒரு
முகம் ஏற்றுவது மத்திம்ம்
2,இரணடு முகம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமை பெருகும்
3,மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகம் தரும்
4,நான்கு முகம் ஏற்றுவது கால்நடை இனத்தை தரும்
5,ஐந்து முகம் ஏற்றுவது செல்வம் பெருகும்
தீபம்
ஏற்றும் முறைகளும், பயன்களும்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான
நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு
மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில்
ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.
முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை
சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில்
தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்
மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன்
கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள்
கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம்
உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம்
விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப
ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில்
சிவபெருமான் வாசம் செய்கின்றனர். . விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி
அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.